பூமியின் மீதிருந்த இருளை மாற்ற வெளிச்சம் உருவாக்கினார். பூமியின் தண்ணீரை ஓரிடத்தில் சேர்த்தார். அதுதான் சமுத்திரம்
பூமி அந்தரத்தில் தொங்குவதாக விஞ்ஞானிகள் இன்று கூற ஆண்டவர் நமக்கு வேதத்தில் அன்றைக்கே எழுதி தந்தார்.
அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். (யோபு 26 :7)
பூமி உருண்டை என்று விஞ்ஞானி இன்று சொல்லுமுன் அன்றே வேதத்தில் எழுதி தந்தார். அவரே பூமி உருண்டையின் மீது இருப்பவர் என்று.
அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்( ஏசாயா 40:22)
இந்த பூமியை ஆண்டவர் மனிதனுடைய குடியிருப்பாக படைத்தார்
- வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய, கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.(ஏசாயா 45:18)*
ஆனால் இன்று மனிதன் பூமியை விட்டு வேறு கோள்களில் இடம் தேடுகிறான். செவ்வாய்க்கு குடியிருக்க போகிறானாம். கர்த்தர் கொடுத்த இடத்தை விட்டு வேறு இடம் போகிறானாம். அது முடிவதில்லை. கர்த்தர் குடியிருக்க கொடுத்த இடத்தில் அடங்கியிருப்பதே நன்மை.
அகந்தை மிக்க ஏதோமியருக்கு ஒபதியா மூலம் சொன்னதை நினைவில் நிறுத்துவோம்
“நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(ஒபதியா 1:4)*